Maamanithan teaser released

Advertisment

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமனிதன்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இது, விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் உருவான மூன்றாவது படமாகும். இப்படத்தின் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவடைந்தும், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது.

இதையடுத்து, படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளதால் விரைவில் 'மாமனிதன்' படம் வெளியாகும் என இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்திருந்தார். சமீபத்தில் வெளியான படத்தின் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="9f5cc98c-9982-4c91-a814-e1b1e292f289" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_59.jpg" />

Advertisment

இந்நிலையில் மாமனிதன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. வித்தியாசமான கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தியும் ஈர்த்து வருகிறது.